திருத்துறைப்பூண்டியில் பெ.சண்முகத்திடம் கட்சி நிதி அளிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு சார்பாக திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற `திருப்பி அடித்த வரலாறு’ நூல் வெளியீட்டு விழா மேடையில், திருத்துறைப்பூண்டி சிபிஎம் நகரக் குழு சார்பாக, வர்க்க வெகுஜன மக்களிடம் கட்சி நிதியாக திரட்டிய ரூ.2 லட்சம் தொகையை, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் முதல் கட்ட நிதியாக நகரச் செயலாளர் ஜி.கோபு வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி சிபிஎம் தெற்கு ஒன்றியக் குழு சார்பாக, வர்க்க வெகுஜன மக்களிடம் கட்சி நிதியாக திரட்டிய ரூ.3 லட்சம் தொகையை கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் முதல் கட்ட நிதியாக ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ் வழங்கினார்.
