tamilnadu

img

தமிழ்நாடு வங்கியை உருவாக்குவதற்கான வாக்குறுதியை திமுக தர வேண்டும்! ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கோரிக்கை

தமிழ்நாடு வங்கியை உருவாக்குவதற்கான வாக்குறுதியை திமுக தர வேண்டும்! ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கோரிக்கை

சென்னை, பிப்.14- தமிழ்நாடு மாநில தலை மை கூட்டுறவு வங்கி மற்றும்  24 மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உரு வாக்க வேண்டும், நகர கூட்டு றவு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலப்  படுத்த வேண்டும் என வலி யுறுத்தி சனிக்கிழமையன்று (பிப்.14) சென்னையில் கருத்  தரங்கம் நடைபெற்றது. கூட்டுறவு வங்கி ஊழியர்  சம்மேளனம் சார்பில் நடை பெற்ற இந்த கருத்தரங்கில் பேசிய ஆர். சச்சிதானந்தம் எம்.பி., “ஒன்றிய கூட்டுறவு  அமைச்சகம் உருவாக்கப் பட்ட பிறகு கடந்த 5 ஆண்டு களில் 56 கூட்டுறவு வங்கி களை மூடியுள்ளனர். ‘இரட்டை  என்ஜின் ஆட்சி’ எனப்படும்  பாஜக ஆளும் மாநிலங்க ளில்தான் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மூடப் பட்டுள்ளன. தொழில்களையும், வங்கிகளையும் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் தான் போராடுகின்றன. கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உரு வாக்கினால் 7 சதவிகித வட்டி யில் கொடுக்கப்படும் கடனை, 5.25 சதவிகித வட்  டிக்குத் தர முடியும். தமிழ் நாடு பலவகைகளில் முன் மாதிரியாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு வங்கி உருவாக்கப்படும் என்று வாக்குறுதியை திமுக தனது  தேர்தல் அறிக்கை வாயி லாக வழங்க வேண்டும்.  அதற்கான முன்முயற்சி களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எடுக்கும்” என்றார். அ.சவுந்தரராசன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய சிஐ டியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன்,  “நிறுவனம் என்றாலே ‘லாபம்’ தான் நோக்கமாக இருக்கி றது. ஆனால் கூட்டுறவு  அமைப்பில், ‘மக்களுக் காக’ என்ற இலக்கை முன்  வைப்பது தான் ஜனநாய கம்” என்றார். வி.கே. பிரசாத் கேரள வங்கி இயக்குநர்  வி.கே. பிரசாத் பேசுகையில்,  “13 மாவட்ட வங்கி மற்றும் கேரள மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து 2019ஆம் ஆண்டு கேரள வங்கி உரு வாக்கப்பட்டது. அது 800-க்கும் மேற்பட்ட கிளை களோடு ஒரு லட்சத்து 25  ஆயிரம் கோடிக்கு வர்த்த கம் செய்துள்ளது. 50 ஆயி ரம் கோடி கடன் அளவு என்று  பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த  நிலையில் மிகப் பெரிய வர்த்  தக அளவை கேரள வங்கி எட்டியுள்ளது” என்றார். இந்நிகழ்வில் அகில  இந்திய விவசாயிகள் சங் கத்தின் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் தி. தமிழரசு, பொதுச் செய லாளர் இ. சர்வேசன், பெபி தலைவர்கள் ரவிக்குமார், சி.பி. கிருஷ்ணன், கூட்டுறவு ஊழியர் சங்கத் தலைவர் ஏ.  கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் பேசினர்.