games

img

விளையாட்டு

பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் உலக சாதனை படைத்த இந்திய வீரர் பிரமோத் பகத்

பஹ்ரைன் நாட்டில் பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் (எஸ்எல் - 3) பிரிவு இறுதிப் போட்டி யில் 5 முறை சாம்பியனான இந்தியா வின் பிரமோத் பகத் - இந்தோனேசி யாவின் முகமது அலி இம்ரானை 21-12, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.  இதன்மூலம் பாரா உலக சாம்பி யன்ஷிப் ஒற்றையர் பிரிவில் 6ஆவது முறையாக தங்கம் வென்று,  உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ஒற்றையர் பட்டங்களை (பொது - பாரா சேர்த்து) வென்ற வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் பிரமோத் பகத். குறிப்பாக பொது பிரிவு வீரரான சீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டான் (5 உலக பட்டங்கள்) சாதனையை பாரா வீரரான (மாற்றுத்திறனாளி) பிரமோத் பகத் முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் பிரமோத் பகத் ஒற்றையர் பிரிவில் 6 முறையும் (2009, 2015, 2019, 2022, 2024, 2026), இரட்டையர் பிரிவில் 3 முறையும் என மொத்தம் 9 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். பீகாரைச் சேர்ந்த 37 வயதான பிரமோத் பகத், இளம் பிள்ளைவாதத்தால் (Polio) பாதிக்கப்பட்டிருந்தாலும், தனது மன உறுதியால் இன்று உலகின் தலைசிறந்த வீரராக உருவெ டுத்துள்ளார். என்பது குறிப்பி டத்தக்கது.

டி-20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

விளையாட்டு உலகில் பிர சித்திப் பெற்றப் போட்டியாக இருப்பது இந்தியா - பாகிஸ்தான் போட்டியாகும். இரு நாடுகளின் சுதந்திர வரலாறு மற்றும் எல்லைப் பிரச்சனைகளுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிக்காக கடுமையான ஆட்டத்தை வெளிப் படுத்துவது வழக்கம். குறிப்பாக வார்த்தை மோதல், தள்ளு முள்ளு என ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறப்பதால், கிரிக்கெட் பிரிவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பிரசித்தி பெற்றதாக உள்ளது.  இந்நிலையில், தற்போது நடை பெற்று வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள இந்த ஆட்டம், இந்திய நேரப் படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வி போன்ற வரலாறு இருந்தாலும், வழக்கம் போல உலகக்கோப்பை போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தி யா - பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கு வதால் ஞாயிறன்று நடைபெறும் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம் (குரூப் சி) நேரம் : காலை 11:00 மணி இடம் : மும்பை, மகாராஷ்டிரா அமெரிக்கா - நமீபியா   (குரூப் ஏ) நேரம் :  மதியம் 3:00 மணி இடம் : சென்னை, தமிழ்நாடு

இந்தியா - பாகிஸ்தான் (குரூப் ஏ) நேரம் : இரவு 7:00 மணி இடம் : கொழும்பு, இலங்கை