கம்போடியா - தாய்லாந்து மீண்டும் மோதல்
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளின் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. கம்போடியாதான் முதலில் தாக்கியது என தாய் லாந்தும், தாய்லாந்து தான் முதலில் தாக்குதல் நடத்தியது எனக் கம்போடியாவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. சில வாரங்களுக்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்த நிலையில் மலேசியா வில் வைத்து அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்கா போரை தவிர்க்க வேண்டும்: வெனிசுலாவுக்கு ரஷ்யா ஆதரவு
வெனிசுலா மீது போர் தொடுப்பதை தவிர்க்குமாறு அமெரிக்க அரசை ரஷ்யா கேட்டுக் கொண் டுள்ளது. மேலும் ரஷ்யா வெனிசுலாவுக்கு ஆதரவாக இருப்பதாக அந்நாட்டின் துணை வெளியுற வுத்துறை அமைச்சர் செர்ஜி ரியப்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் கரீபியன் பகுதிகளில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது கரீபியன் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டத்துடன் தொடர்புடையது எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் செய்ய நிதி கேட்கும் ஐ.நா
உலகம் முழுவதும் போர்கள் மற்றும் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 13.5 கோடி மக்களுக்கு உதவி செய்ய நிதி கேட்டு ஐ.நா அவை கோரிக்கை விடுத்துள்ளது. 2026 ஆம் ஆண்டு உதவி செய்ய சுமார் 2 லட்சத்து 97 ஆயிரத்து 353 கோடி ரூபாய் நிதி உதவி தேவைப்படுகிறது என ஐ.நா. தெரிவித்துள்ளது. காசா, உக்ரைன், சூடான், ஹைட்டி மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள 8.7 கோடி மக்களுக்கு மட்டுமே 2 லட்சத்து 7 ஆயிரத்து 246 கோடி ரூபாய் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேசியா வெள்ளப் பாதிப்பு : மறுசீரமைப்புக்கு 28 ஆயிரம் கோடி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அந்நாடு மிக மோசமான பேரழிவை சந்தித்தது. இந்நிலையில் மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக 28 ஆயிரத்து 23 கோடி நிதி தேவைப்படும் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். இந்தோனேசியாவில் இயற்கைச் சீற்ற பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக உயர்ந்துள்ளது. 274 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தப் பாதிப்பில் தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியாவிலும் சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர்
. ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கும் ஜெலென்ஸ்கி
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் திட்டம் தொடர்பான கோப்புகளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்னும் படிக்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க ஜெலென்ஸ்கி இங்கிலாந்து சென்றுள்ளார். உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சனிக்கிழமை முடிவடைந் தது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் அவர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்திக்கச் சென்றுள்ளார்.
