கொடும் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பு: பிரிட்டன் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது
லண்டன்,பிப்.19- குழந்தைகளை தனித்தீவில் வைத்து பாலியல் கொடுமை மற்றும் வணிகத்தில் ஈடுபட்ட கொடும் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பிரிட்டன் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது செய்யப் பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை இங்கிலா ந்தின் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது பெயரை காவல்துறை நேரடியாக குறிப்பிட வில்லை. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்க ளில் பிரிட்டன் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது, அவரது தனித்தீவுக்கு சென்றது, சிறுமிகள் பெண்களை அவருடைய பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. குறிப்பாக அது தொடர்பான புகைப்படங்களும் அந்த ஆவணங்களில் வெளியாகியிருந்தது. பிரிட்டன் அரசின் ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு வழங்கியதாகவும் புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்கள் குறித்து தேம்ஸ் வேலி காவல்துறை பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து விசாரணை நடத்தி வந்தது. காவல்துறையின் அறிக்கை பிரிட்டன் அரசின் ரகசிய ஆவணங்க ளை எப்ஸ்டீனுக்கு வழங்கிய வழக்கில் நார்ஃபோக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். இது தொடர்பாக பெர்க்ஷ யர், நார்ஃபோக் ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என தேம்ஸ் வேலி காவல் துறை அறிக்கை வெளியிட்டது. எனினும் கைது செய்யப்பட்டது ஆண்ட்ரூ தான் என அவ்வறிக்கையில் அவர்கள் நேரடியாக குறிப்பிடவில்லை. அரசு வழிகாட்டுதல்களின்படி, கைது செய் யப்பட்ட நபரின் பெயரை வெளியிட வில்லை. ஆண்ட்ரூ தற்போது காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பதாகத் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியத் தொழிலாளர்கள் மீது இஸ்ரேலில் இனவெறித் தாக்குதல் மோடி செல்லும் நிலையில் கொடூரச் செயல்
டெல்அவிவ்,பிப்.19- பிரதமர் மோடி பிப்.25 அன்று இரு நாள் பய ணமாக இஸ்ரேல் செல்ல உள்ள நிலையில் அங் குள்ள இந்தியத் தொழிலாளர்கள் மீது மிகக்கொடூர மான இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவிலும் காசா விற்கு மிக அருகிலும் உள்ள அஷ்கெலோ என்ற நகரில் தான் இந்தியத் தொழிலாளர்கள் சிலர் மீது திட்டமிட்ட இனவெறித் தாக்குதல் அரங்கேற்றப் பட்டுள்ளது. தாக்குதலின் பின்னணி இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி பொது மக்கள் பூங்காவிற்கு அருகே இந்தியத் தொழிலாளர்கள் ஒரு கும்ப லால் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்தத் தாக்குதல் “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட” ஒன்று என்றும், தாக்குதலுக்கு முன்பாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தாக்குதல்காரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர் என்றும் பட்டப்பகலில் நடந்த இந்தத் தாக்குதல் “இனவெறி மற்றும் வன்மம்” காரணமாக அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எச்சரிக்கையை மீறிய பாஜக அரசு 2023 அக்டோபர் மாதம் பாலஸ்தீனத் தொழி லாளர்களின் பணி உரிமங்களை இஸ்ரேல் ரத்து செய்தது. அதன் பிறகு, அங்கு நிலவும் தொழிலா ளர் பற்றாக்குறையைப் சரி செய்ய இந்தியத் தொ ழிலாளர்களை அனுப்ப பாஜக அரசு முடிவு செய்தது. இதனடிப்படையில் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களி லிருந்து ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழி லாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்த நடவடிக்கை இந்தியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. மோடி அரசின் பலவீனம் மோடி தலைமையிலான பாஜக அரசு நமது வெளியுறவுக்கொள்கையை சிதைத்ததன் வெளிப்பாடாகத்தான் இந்தத் தாக்குதலை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு டிரம்ப்பின் அழைப்பின் பேரில் மோடி அமெ ரிக்கா சென்றார். அவர் அந்நாட்டில் இருக்கும் போதே அமெரிக்காவில் போதிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த நமது நாட்டு மக்களின் கைக ளிலும் கால்களிலும் விலங்குகள் மாட்டி ஏதோ சர்வதேச குற்றவாளிகளைப் போல இந்தியா விற்கு நாடு கடத்தினார் டிரம்ப். இந்த சம்பவம் உலகளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற் படுத்தியதுடன் பாஜக ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை பலவீனம் அடைந்துள் ளது என்பதனையும் பட்டவர்த்தனமாகக் காட்டியது. தற்போது பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்கிறது என சர்வதேச நீதி மன்றத் தீர்ப்பில் உறுதியான பிறகும் அந்நாட்டு டன் நெருங்கிய உறவை பேண நினைப்பது பாலஸ் தீனம் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்யும் என மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து பாஜக அரசுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
