உலகம் முழுவதும் ஆயுத மோதல்களில் நிகழும் பாலியல் வன்முறை கடந்தாண்டு 25% அதிகரித்துள்ளது என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024ஆம் ஆண்டு மட்டும் 4,600க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்முறையிலிருந்து உயிர் தப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான சம்பவங்கள் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்டவையாக இருந்தாலும், சிலவற்றை அரசுப் படைகளும் மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 12 நாடுகளில் 63 அரசு மற்றும் அரசுசாராத ஆயுதமேந்திய அமைப்புகளின் பெயர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ, ஹைட்டி, சோமாலியா, தென் சூடான் போன்ற நாடுகளில் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தப் பட்டியலில், அடுத்தாண்டில் இஸ்ரேல் மற்றும் ரஷியாவின் படைகளும் சேர வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது.