“மோடியின் விருப்பத்துக்கு இயங்கும் நீதித்துறை”
மோடியின் விருப்பத்துக்கு நீதித்துறை இயங்குவ தாக பிபிசி தொலைக் காட்சிக்காக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டை பேட்டி எடுத்த ஸ்டீபன் சகூர் கூறியுள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக இயங்க முடியாமல் தகுதிநீக்கம் செய்யும் படி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியது தொடங்கி, இந்தியாவின் எதிர்க் கட்சி தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் மோடி யின் விருப்பத்தின் பேரில் செயல்படும் நீதி மன்றங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடக்கப்படுகின்றனர்” என அவர் கூறினார். ஸ்டீபன் சகூரின் கருத்தால் பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.