world

img

தலிபான்களுக்கு அதிகாரத்தை அமைதியாக கொடுக்க விரும்பினேன்.... தப்பி ஓடிய ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஒப்புதல்....

துபாய்:
தலிபான்களுக்கு அதிகாரத்தை அமைதியாக கொடுக்க விரும்பினேன் என்று தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ள னர். இதனால் அமெரிக்கா தயவில்பதவியில் இருந்த அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி  நாட்டை விட்டு விமானத்தில் தப்பி ஓடினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனியையும் அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அவர் பேசிய வீடியோ துபாயில் இருந்து பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.அதில் அஷ்ரப் கனி பேசுகையில், காபூலில் தங்கியிருந்தால் பெரிய வன்முறையை  சந்திக்க வேண்டியதிருக்கும்.  தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு நன்றி.தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை. இது எங்கள் தோல்வி. தலிபானுக்கு அதிகாரத்தை அமைதியாக மாற்ற விரும்பினேன். ஆனால்எனது விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் பணம் கொண்டுவந்ததாக கூறப்படும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அவை பொய். நாட்டின் தலைவராக எனக்கு அச்சுறுத்தல் உள்ளது .என்று கூறியுள்ளார்.  நாடு திரும்ப “பேச்சுவார்த்தையில்” ஈடு பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.