world

img

ரஷ்யாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா விருப்பம்

மாஸ்கோ, செப்.7- ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில்  நடைபெற்ற 7-ஆவது கிழக்கு பொருளாதார மன்ற அமர்வின் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ரஷ்யாவில் முதலீட்டை அதிகரிக்க 2015-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொருளாதார மன்றம், ரஷ்ய தூர கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பின் முதன்மை தளமாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். விளாடிவோஸ்டாக் நகரில் இந்திய துணை தூதரகம் தொடங்கப்பட்டு, 30 ஆண்டு கள் நிறைவடைந்துள்ளதையும், முதன் முதலில் இந்தியா தான் அங்கு தூதரகத்தை திறந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ரஷ்யாவில் எரிசக்தியுடன், மருந்து மற்றும் வைரத் துறைகளிலும் இந்தியா  குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ள தாகவும் குறிப்பிட்டார். மேலும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில், பூமியின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் முழு மனிதகுலத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்குவதாகவும், உக்ரைன் - ரஷ்யா மோதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் பாதிப்பு ஆகியவை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்ப தாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்டுள்ள உணவு தானி யம், உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு வளரும் நாடுகளுக்கு மிகுந்த கவலை யளிக்கும் விவகாரம் என்று கூறினார். உக்ரைன் மோதலின் தொடக்கத்தில் இருந்தே இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த  வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து அமைதியான முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக தெரிவித்தார்.

;