world

img

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்

ஹவானா, அக்.12-  கியூபா வெளியுறவு அமைச்சகம் வெளியிட் டுள்ள ஓர் அறிக்கையில், இஸ்ரேல்-பாலஸ்தீனியர்க ளுக்கும் இடையே எழுந் துள்ள போர்ச் சூழலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ் தீனத்துக்கும் இடையே அதிகரித்துள்ள பதற்றங்கள் குறித்தும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ் தீன மக்கள் மீதான 75 ஆண்டுகால உரிமை மீறல் குறித்தும் கியூபா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு கியூபா ஒரு பரந்த, நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக் கோருகி றது; இரண்டு நாடுகள் கோட் பாட்டின் படி, பாலஸ்தீன மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வும், கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட அதன் எல்லைகளுக்குள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசை அம்மக்கள்   பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கியூபா கூறியுள்ளது.  அதேபோல், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தனது ஆணையை நிறைவேற்றி, இஸ்ரேலின் விரும்பத்தகாத பாதகங்கள் மற்றும்  இழப்புகளுக்கும் மத்திய கிழக்கு நாடுக ளில் பாதுகாப்பு மற்றும் நிலையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பல்லாயிரக்க ணக்கான மக்களின் உயி ரைப் பறித்துள்ள மோதலை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கும் வகையில், அமைதி மற்றும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை உருவாக்கிட கியூப வெளி யுறவு அமைச்சகத்தின் அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. சீனா வேண்டுகோள் இதேபோல் வியாழக்கிழ மையன்று சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், இஸ்ரேல்- பாலஸ்தீனம் போரை உடன டியாக நிறுத்தி பொதுமக்க ளைப் பாதுகாக்க முன்னு ரிமை கொடுக்க வேண்டு மெனவும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சர்வதேச சமூகம் கூட்டாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும் இரு நாடு கொள்கையை அமல்படுத்தி ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை அமைக்க வேண்டும்; அமைதி பேச்சு வார்த்தைகளை துவங்க வேண்டும்; இதுவே இரு நாடுகளுக்கிடையிலான அமைதியான வாழ்வை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.