காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி பிரம்மாண்ட பேரணி
காலநிலை மாற்றத்தைக் கட்டுப் படுத்த விரைவான ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுக்கக் கோரி 90க்கும் மேற் பட்ட அமைப்புகள் சேர்ந்து 25 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்களை ஒன்றிணைத்து பெல்ஜியம் தலை நகரில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இப்பேர ணியில் “நாங்கள் வாழ ஆரோக்கியமான உல கத்தை விரும்புகிறோம்” என்றும் “காலநிலை மாற்றம் வேண்டாம், அமைப்பு மாற்றம் வேண்டும்” என்றும் பதாகைகளை ஏந்தி உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்தனர்.
இஸ்ரேல் வணிகத்தை குறிவைக்கும் ஹவுதி
ஹவுதி அமைப்பான அன்சாருல் லாவின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் எல்லை வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்பு கப்பல்கள் சிறை பிடிக்கப்படும் என ஏமன் நாட்டின் ஹவுதி குழு அறிவித்து சிறை பிடித்து வருகிறது.இதனால் இஸ்ரேல் கப்பல் கள் எகிப்து, துனிசியா, மொராக்கோ என பல ஆயிரம் நாட்டிகல் (கடல்) மைல் சுற்றிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.இதனால் இஸ்ரேல் மக்கள் தொடர் விலை உயர்வுகளை எதிர் கொள்ளும் நெருக்கடி உருவாகியுள்ளது.
வெப்பமண்டல மழைக் காடுகளைப் பாதுகாக்க முன்மொழிவு
உலகின் வெப்பமண்டல காடுக ளைப் பாதுகாக்கவும் அழிக்கப் பட்ட காடுகளை மீண்டும் உருவாக்கவும் அரசு மற்றும் தனியார் துறையினரிடம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டுவதை நோக்க மாகக் கொண்ட முன்மொழிவை துபாயில் நடந்த காப்-28 காலநிலை உச்சி மாநாட்டின் போது, பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சர் மரினா சில்வா மற்றும் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோர் முன் மொழிந்துள்ளனர்.
எரிமலை வெடிப்பு 11 பேர் பலி
சுமத்ரா தீவில் ஏற்பட்ட மெராபி எரிமலை வெடிப்பில் 11 பேர் பலியாகியுள்ள னர். 14 பேர்காணாமல் போயுள்ளனர்.மலை யேற்றம் செய்த மக்கள் பலர் அங்கு சிக்கி யுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.எரிமலை யில் இருந்து வெளியேறும் சாம்பல்கள் வானத்தில் மூன்று கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்து வருகிறது. இதனால் தற்போது மலையை சுற்றி 3 கி.மீ பரப்பளவிற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு வேலைத் திட்டம்
லிபியா உடன் குழந்தைகளுக்கான நீதி, பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை ஐ.நா குழந்தைகள் நிதியம் உருவாக்கியுள்ளது. இது ஐ.நா உடன்படிக்கைக்கு ஏற்ப தேசிய குழந்தைகள் நீதி அமைப்பை சீர்திருத்து வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சேவைகளை மேம்படுத்த “தொழில்நுட்ப உதவி, பயிற்சி” முதலியவற்றை வழங்க உள்ளது.