world

img

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

  1.  அல்ஜசீரா ஊடகம் தனது பத்திரிகையாளர் இஸ்ரேல் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
  2.  மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் வெள்ளை கொடியுடன் வந்த பொழுதும் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதை கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பணயக்கைதிகளின் உறவினர்கள் போரை நிறுத்தி அவர்களை விடுவிக்குமாறு இஸ்ரேல் அரசை நிர்ப்பந்திக்கின்றனர்.
  3.  இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் இதுவரை 285 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  4.  காசாவில் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த ஒரு கிறித்துவ தாயையும் அவரின் இரு குழந்தைகளையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றதை ஜெருசலேம் பேராயர் வன்மையாக கண்டித்துள்ளார். இன்னொரு சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவம் YMCA  அமைப்பின் கட்டிடத்தை தாக்கி பலரை கொன்றுள்ளது.
  5.  ஐ.நா.வின் இடம் பெயர் மக்களின் உதவி பிரிவு காசாவில் ஐ.நா. அமைப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் 150 தாக்குதல்களை நடத்தியுள்ளது என தெரிவித்துள்ளது. ஐ.நா.வை மதிக்காத இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கும் திறன் இல்லாத அமைப்பாக ஐ.நா. ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம்.
  6.  நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கல்லறைகளை இஸ்ரேல் ராணுவம் காசாவில் அழித்துள்ளது. சில பாலஸ்தீனிய செயற்பாட்டாளர்களின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் திருடி சென்றுள்ளது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  7.  ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு வீரரை இஸ்ரேலிய ராணுவம் இழக்கிறது எனவும் எனவே கல்லூரி மாணவர்கள் ராணுவத்தில் இணைய வேண்டும் எனவும் இஸ்ரேல் ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது.  
  8.  போருக்கு பின் காசாவை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார். ஆனால் அவரின் கருத்தை நெதன்யாகு நிராகரித்துள்ளார். இப்படி கருத்து வேறுபட்டாலும் இஸ்ரேலுக்கு தரும் ஆயுதங்களை அமெரிக்கா நிறுத்த தயங்குவது இல்லை.
  9.  ஹெசபுல்லா அமைப்பை லெபனானிலிருந்து ஒழித்தே தீருவோம் என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் கூறி யுள்ளார். ஹாமாசை இதுவரை ஒழிக்க இயலாத இஸ்ரேல் ராணுவம் ஹெசபுல்லாவை எப்படி ஒழிக்க இயலும்? 2006ம் ஆண்டில் லெபனானில் ஹெசபுல்லாவிடம் தோற்று பின்வாங்கியது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேலை தோற்கடித்த ஒரே அமைப்பு ஹெசபுல்லாதான்!

- அ.அன்வர் உசேன்