world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்:  பைடன்-டிரம்ப் நேரடி போட்டி

அமெரிக்க ஜனாதிபதி தேர்த லில் தற்போதைய ஜனாதி பதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதி பதி டொனால்டு டிரம்ப் ஆகிய இரு வரும் நேரடியாக போட்டியிட உள்ள னர். குடியரசு கட்சி சார்பில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி ஆகியோரை விட அதிக ஆதரவு பெற்று தற்போது டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 2024 நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.  

‘நாற்பது லட்சம் மக்களுக்கு  உணவு பாதுகாப்பு இல்லை’

ஹைட்டி நாட்டில் நாற்பது லட்சம் மக்கள்  கடு மையான உணவுப்பாதுகாப்பின் மையை  எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. அதில் சுமார் 10 லட்சம் பேர் தீவிரமான பஞ்சத் திற்குள் செல்லும் நிலையில் உள்ளனர்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் சூழலில் பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து வரும் நிலையில் கரீபியன் நாடுகளின்ஐ.நா உணவு முகமையின் இயக்குநர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பாலஸ்தீனர்களுக்கு  நிவாரணப்பொருட்கள் : இராக் வழங்கியது

இராக் அரசு 36 டிரக்குகளில் பாலஸ்தீனர்களுக்கு தேவை யான உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவா ரணப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.இந்த நிவாரணப் பொருட்களை ஜோர்டான் ராணுவம் ஒருங்கிணைத்து தரை வழியாக பாலஸ்தீனர்களுக்கு வழங்க உள்ளது. பாலஸ்தீனர்களுக்கான உணவுப்பொருட் களை இஸ்ரேல் தடுத்து வரும் நிலையில் ஜோர்டான் ராணுவம் எகிப்துடன் இணைந்து ராணுவ விமானங் கள் மூலமாக கடந்த மாதம் உணவுப்பொருட்களை வழங்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.