world

img

தேவை உலக ஒற்றுமை...

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல்லெண்ணத் தூதுவராக இருக்கிறார். அண்மையில் ஐ.நா. சபையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் உலகளாவிய ஒற்றுமையே இன்றைய தேவை என்றார். தனது உரையில் மேலும் அவர் குறிப்பிட்டதாவது: முன்னெப்போதையும்விட உலகளாவிய ஒற்றுமை என்பது தற்போது அதிகம் தேவைப்படுகிறது. இன்னமும் பல நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் போராடி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பு, பருவநிலை மாற்றம், நாடுகளிடையேயான மோதல்கள், வறுமை, இயற்கைச் சீற்றம், இடப்பெயர்வு, பசி, சமூக ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் மனித சமூகத்தின் அடித்தளத்தையே அழிக்கின்றன. இவற்றிலிருந்து மீண்டுவர உலகம் நீண்டகாலமாகப் போராடி வருகிறது. இந்த நெருக்கடிகள் தற்செயலாக ஏற்பட்டவை அல்ல. இவற்றிலிருந்து மீள்வதற்கு சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். இதற்கு உலகம் தற்போது ஒற்றுமையோடு செயல்படுவது அவசியம் என்று பிரியங்கா சோப்ரா பேசினார். கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற மலாலாவும் பேசினார்.  பிறகு இருவரும் சந்தித்துப் பேசினார்கள்.

;