articles

தமிழ்நாட்டில் நூலகங்கள்... அவல நிலை மாறுமா -

தமிழ்நாட்டில் நூலகங்கள்... அவல நிலை மாறுமா?!

சமூக முன்னேற்றம் என்பது அறிவியல் தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு இவற்றை யெல்லாம் கடந்து அறிவு தேடல் என்கிற  குறி யீட்டினால் அளக்கப்பட வேண்டும்.  ஒரு சமூகத்தின் வாழ்க்கை செம்மையாக இருக்கிறது என்றால் அங்கே புத்தக வாசிப்பும்,  எழுத்தறிவும் நூலகத் துறையும் எப்படி செயல்படுகிறது என்பது ஒரு குறியீடு ஆகும். தமிழ்நாட்டின் சமீபத்திய அற்புத  சாதனை “நான் முதல்வன்” என்கின்ற அந்த பயிற்சி பாசறையின் மூலம் ஏறத்தாழ 60 பேர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி  பெற்ற நிகழ்வு.  இந்த பயிற்சி அனைத்துமே தமிழ கத்தின் முன்னணி நூலகங்களில் வைத்து தரப்பட்ட அற்புதமாகும். இதற்காக நாம் தமிழக அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம் நூலகத் துறை தொடர்பான விஷயங்களில் அரசு மெத்தனமாக உள்ளதோ என்று சந்தேகம் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நூலக ஆணை குழுவின் செயல்பாட்டில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. 2018-19 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் பதிப்பாளர்களிடமிருந்து நூலகத் துறையால் கொள்முதல் செய்யப்பட்டது. 2020-21, 2021-22, 2022-23  ஆண்டுகளில் வெளியான புதிய  நூல்களுக்கு நூலக ஆணை வழங்கு வதற்கு மாதிரி பிரதிகள் கூட இதுவரை பெறப்படவில்லை.   ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களின் மாதிரி பிரதிகள் பெறப்பட வேண்டும்.  ஆனால் நூலகத்துறை எதையும்  வாங்கியதாக செய்தி இல்லை.  புரட்சி கரமான பல மாற்றங்கள் அறி விக்கப்பட்டன. இந்த மாற்றங்கள் பதிப்பாளர்கள் இடையே,  எழுத்தாளர்களிடையே மேலும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. ஒரு புத்தகம் வெளிவரும்போதே அது குறித்த விவரங்களை அனுப்பி னால் உடனே வாங்குவோம் என்று நூலகத்துறை கூறுகிறது. ஆனால்  கடந்த நான்கு ஆண்டுகளாக புத்த கங்கள் வாங்கப்படாமல் இருக் கின்றன. இதனால் பெரும்பாலான நூலகங்கள் பழைய புத்தக கடை களைப் போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலக்கியத்திற்காகவும் வாசிப்புக் காகவும் பொது ஜனங்களுடைய புத்தக விற்பனைக்காகவும் எத்த னையோ விஷயங்கள் செய்யும் தமிழக அரசு நூலகங்களை இப்படி கிடப்பில் போட்டுள்ளது மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயமாகும். கடந்த ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நூல் கொள்முதலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இன்று காகிதத்தில் விலை பல மடங்கு ஏறிவிட்டது. அதற் கேற்றார் போல் விலையேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.  அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்று அற்புதங்களை இந்த அரசு படைத்து வருகிறது. மாவட்ட  நூலகங்கள், கிளை நூலகங்கள்  நட மாடும் நூலங்கள், ஊர் புற நூல கங்கள் பகுதிநேர நூலகங்கள் என்று  தமிழ்நாட்டில் மொத்தம் 3446 நூல கங்கள் உள்ளன. ஆனால் புத்தகங் கள் கொள்முதல் எண்ணிக்கை 600 ஆக மட்டுமே இருக்கிறது. கூடுதல் எண்ணிக்கையில் புத்த கங்கள் வாங்க வேண்டும் என்று பதிப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கம் உட்பட பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். நூலக ஆணைக்குழுவுக்கு புத்தகங்கள் சமர்ப்பித்து விட்டு எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் இந்த புத்தக சமர்ப்பிப்புக்காகவே ஏராளமாக செலவு செய்து விட்டு காத்திருக்கும் அவலம் முடிவுக்குவர வேண்டும் என்பதுதான் அனைத்து விருப்பமாகும்.