“எல்லோரும் நலமே...?”
மூத்த பத்திரிகையாளர் பா. திருமலை அவர்களின் 60வது படைப்பான “எல்லோரும் நலமே...?” நூல், இன்றைய சமூகத்தின் நெருக்கடி களை ஏழு முக்கிய தலைப்புகளில் ஆராய்கிறது. காந்திய, பெரியார், மார்க்சிய சிந்தனைகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், குடும்பம், உணவு, சமூகம் மற்றும் கால நிலை மாற்றம் ஆகிய தளங்களில் 32 கட்டுரைகளை வழங்கியுள்ளார். நூலில் பெண் குழந்தை கள் பாதுகாப்பு, பெற்றோர் -குழந்தை உறவு, இளை ஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், ஆரோக்கிய மான உணவுப் பழக்கங்கள், பாரம்பரிய விளையாட்டு களின் முக்கியத்துவம், போதைப்பொருட்கள் பிரச்சனை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள் குறித்த ஆழமான பார்வை காணப்படுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் தகவல் நிறைந்ததாகவும், சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்து வதாகவும் அமைந்துள்ளது. அனைத்து வயதினருக்கும் பயனுள்ள இந்நூல், கல்வி நிறுவனங்கள் மற்றும் நூலகங்களில் இடம்பெற வேண்டிய ஒரு அரிய படைப்பாகும்.
“கொடைக்கானல் குல்லா”
“குழந்தைகளும் பல்லுயிர் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்” என்ற நோக்கத்துடன் இயற்கை வரலாறு, சூழல் பிரச்சனைகள், நதிநீர் இணைப்பு, ஒலி மாசு, பருவநிலை பிறழ்வு குறித்து எழுதி வரும் சதீஷ் முத்து கோபால் அவர்களின் சிறுவர் நூல் “கொடைக்கானல் குல்லா”. ஈரோட்டில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒன்று தன் குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா செல்லும் கதையாக படைக் கப்பட்டுள்ள இந்நூல், குழந்தையின் ஆர்வமிக்க கண்களால் இயற்கையை அறிமுகப்படுத்துகிறது. மலைகளில் ஆறுகள் உருவாகும் விதம், காட்டு யிர்களின் வகைகள், குறிஞ்சிப் பூக்களின் வர லாறு, நெகிழி மாசுபாடு, ஆங்கிலேயர் காலத்தில் அறிமுக மான அயல்நாட்டு மரங்களால் உள்ளூர் தாவரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என சூழலியல் சார்ந்த பல முக்கிய தகவல்களை எளிமையாக வழங்குகிறது. வண்ண ஓவியங்களுடன் கூடிய இந்நூல், டிஜிட்டல் உலகில் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, சுற்றுலா செல்லும்போது இயற்கையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை புரிய வைக்கிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களும் சூழலியல் பற்றிய பல அறிவியல் தகவல்களை அறிந்துகொள்ள உதவும் அருமையான படைப்பு.