கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக தில்லியில் உள்ள சிவில் சமூக அமைப்பான யுனைடெட் கிறிஸ்டியன் போரம் புதிய தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தர வில்,”2023-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கிறிஸ்தவர் களுக்கு எதிரான தாக்குதல் சம்ப வங்கள் மிகமோசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும், முதல் 8 மாதங்களில் 23 மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 525 வன்முறைச் சம்பவங்கள் அரங் கேறியுள்ளன” எனக் கூறியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு முழுவதும் நடந்த மொத்த சம்பவங்களின் எண்ணிக் கையை வெறும் 8 மாதங்களிலேயே நெருங்கியுள்ளது” எனக் கூறப்பட் டுள்ளது. உத்தரப்பிரதேசம் டாப் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் முதலி டத்தில் உள்ளது. உத்தரப்பிர தேசத்தில் கடந்த 8 மாதங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 211 சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கரில் 118 சம்பவங்களும், ஹரியானாவில் 39 சம்பவங்க ளும் அரங்கறியுள்ளது. சத்தீஸ்க ரில் அரங்கேறிய சம்பவங்கள் அனைத்தும் இந்துத்துவா அமைப்புகளால் நிகழ்த்தப்பட் டவை ஆகும். சத்தீஸ்கர் மட்டு மல்ல, நாடுமுழுவதும் 23 மாநிலங்க ளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அரங்கேறிய 95% சம்பவங்கள் இந்துத்துவா கும்பல்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன. மணிப்பூரிலும்... பாஜகவின் இழி அரசியலால் கடந்த 5 மாதங்களாக பற்றி எரிந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் 386 வழிபாட்டுத்தலங்கள் கொளுத் தப்பட்டுள்ளன. இதில் 254 கிறிஸ் தவ தேவாலயங்கள் ஆகும். மேலும் கிறிஸ்தவ மக்களை குறி வைத்து தாக்குதல் சம்பவங்கள் அங்கு மிக மோசமாக அதிகரித்து வருகின்றன.