world

img

அமேசான் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைன் வர்த்தக சட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக அமேசான் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
அமேசான் நிறுவனம் தனது விற்பனை தளத்திலும், சமூக வலைத்தளத்திலும்  ஆதிக்கம் செலுத்தி லாபமடைந்ததாகவும், அமேசான் தளத்தில் பல விற்பனையாளர்களின் பொருட்களைக் குறைந்த விலைக்கு கிடைக்கும் நிலையில், அமேசான் அதன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பொருட்களை முன்னிலைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  
இதன் மூலம் மற்ற விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பொருளை அமேசான் தனது சொந்த விற்பனை நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு விற்றதாகவும் அமெரிக்கக் கூட்டாட்சி வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 17 மாநில அட்டர்னி ஜெனரல் 4 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
இதேபோல் இணையத் தேடுபொறி சந்தையில் மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ள சட்ட விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் மீதும் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.