பத்திரிகையாளர்கள் இறுதி நிகழ்ச்சி: நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் பங்கேற்பு
இஸ்ரேல் ராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட ஆறு பத்திரிகையாளர்களின் இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. அல்- ஷிஃபா மருத்துவ மனையிலிருந்து மத்திய காசாவில் உள்ள ஷேக் ரத்வான் கல்லறைக்கு பத்திரிகையாளர்க ளின் உடல்களை ஊர்வ லமாக கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் பங்கேற்றனர்.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சுட்டுக்கொன்ற அதிரடிப் படை
சூடானில் துணை ராணுவப் படை (RSF) பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 40 பேரை படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்துக் கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு ராணுவம் டார்பரின் நகரை கைப்பற்றியுள் ளது. இந்நிலையில் பஞ்சத்தால் பாதிக் கப்பட்டு இடம்பெயர்ந்து அந்த நகரின் பாதுகாப்பு முகாமில் அடைக்கலம் புகுந்தி ருந்தவர்கள் மீது இத்தாக்குதலை அரங்கேற்றியுள்ளது துணை ராணுவம்.
பட்டினி மரணங்களை தடுக்க அவசர நடவடிக்கை வேண்டும் : ஐ.நா
காசாவில் இஸ்ரேல் பஞ்சத்தை திட்டமிட்டு உருவாக்கி பட்டினியை ஆயுதமாக பயன் படுத்தி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட குழந்தை கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலி யாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அதி கரிக்கும் எனவும் மேலும் 3,00,000க்கும் மேற்பட்டகுழந் தைகள் கடுமையான ஆபத்தில் உள்ளனர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொடுமை யான சாவுகளை தடுக்க ஐ.நா. மனிதாபிமான அமைப்பு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு ஈரானுடன் பேச்சுவார்த்தை
ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் மாசிமோ அபாரோ ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுடனான போருக்கு பிறகு ஜூன் மாதம் அந்த நிறுவனத்துடனான உறவை ஈரான் துண்டித்தது. இந் நிலையில் இந்த சந்திப்பில் எதிர்கால ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடத்தப்பட்டதாக ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் கரிபாபாடி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்
பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப் படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ் தான் மோதலுக்குபிறகு பாகிஸ்தான் ராணு வத் தளபதி அசிம் முனீர் இரண்டாவது முறையாக அமெ ரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த அறி விப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். தெற்காசிய பகுதியில் சீனாவிற்கு எதிராக தன் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காக பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
