world

img

தீக்கதிர் உலக செய்திகள்

மெக்சிகோ மீது தாக்குதல்: அமெரிக்கா திட்டம்? 

மெக்சிகோ பகுதியில் எம்கியூ-9 ரீப்பர் ரக டிரோன்களை அமெரிக்க உளவுத் துறை நிலை நிறுத்த துவங்கியுள்ளது. போ தைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பயங்கரவா திகளை  கண்காணிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி. அவர்கள் மீது திடீர் தாக்குதலை கூட அமெ ரிக்கா நடத்தலாம் என கூறப்படுகின்றது. எனி னும் மெக்சிகோவை அமெரிக்கா ஆக்கிர மிக்கும் என டிரம்ப் மிரட்டி வருகின்ற நிலையில் மெக்சிகோ மீது திடீர் தாக்குதல் நடத்த திட்டமா என கேள்விகள் எழுந்துள்ளன.

ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு  அனுப்ப ஐரோப்பா திட்டம் 

உக்ரைனுக்கு சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப  ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெ ரிக்காவின் வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட வில்லை. மேலும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போரைத் தீவிரப்படுத்த திட்டமிடும் நிலையில் வீரர்களை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவா? பாக். விவசாயிகள் போராட்டம் 

விவசாயத்துறையை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் பாகிஸ்தான் அரசின் முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் கூடி போராடிய விவசாயிகள் தொடர் பிரச்சார இயக்கத்தை யும் துவங்கியுள்ளார்கள். விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் சிந்து நதியில் அமைக்கவுள்ள கால்வாய் பணிகளால் ஆயிரக்கணக்கான சிறு விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உள்ளூர் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கும் என்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரு : 157 மாவட்டங்களில்  அவசர நிலை அறிவிப்பு 

பெருவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை யால்  கடுமையான சேதம் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் வரும் நாட்களிலும் கன மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதனால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 157 மாவட்டங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள் ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பிரத மர் குஸ்தவோ அட்ரியன்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘சொந்த பாதுகாப்புக் கொள்கையை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்க வேண்டும்

ஐரோப்பிய நாடுகள் சொந்த பாதுகாப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் உலக அரசியலில் சமீப காலத்தில் அமெரிக்காவின் நிலைபாட்டில் ஏற்பட்டு வருகின்ற  மாற்றங்களைத் தொடர்ந்து இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.அதேபோல  ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் எந்த ஒப்பந்தத்திலும் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின்  உரிமைகள்  கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.