what-they-told

img

தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் நீர்-நில பறவைகள் கணக்கெடுப்பு

சென்னை,ஜன.25- தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் நீர்-நில பறவை கள் கணக்கெடுப்பு நடை பெறுவதாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப் பாளர் தெரிவித்திருக்கிறார்.  இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு:-  தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந் தோறும் வடகிழக்கு பருவ மழை முடிந்த பிறகு நடை பெறும். அதன்படி 2022-2023 ஆம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவை கள் மற்றும் நிலப்பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன்படி, நீர் பறவைகளின் கணக்கெடுப்பா னது இவ்வருடம் வருகிற 28, 29 ஆகிய தேதிகளிலும், நிலப்பற வைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளிலும் நடத்திட உத்தேசிக் கப்பட்டுள்ளது.  

பறவைகள் கணக்கெடுப்பிற் காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளின் கணக்கெடுப் பிற்காக 20 இடங்களிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப் பிற்காக மாவட்டந்தோறும் 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளது.  பறவைகள் கணக்கெடுப்பா னது தமிழ்நாடு முழுவதும் நடை பெறவுள்ளதால் இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும்அந்தந்த மாவட்ட வன அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

;