what-they-told

img

கபடத்தனமே உன் பெயர் தான் பாரதிய ஜனதாவா?

உள்ளொன்று வைத்து வெளி வேஷம் போடும் கபடத்தனத்திற்கு பெயர் தான் பாரதிய ஜனதா கட்சி போலும். ஆம், ஏற்கெ னவே அந்த கட்சியின் வரலாறு அப்படிப் பட்டதுதான் என்றாலும், ஒவ்வொரு நாளும் அதை மென்மேலும் வலுப்படுத்தும் செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமான பருத்தி நூல் விலை கடந்த சில மாதங்க ளாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் பின்னலாடை உள் ளிட்ட தொழில் துறையினர் தொழில் நடத்த முடியாமல் பாதிக்கப்படுவதுடன், அதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக் கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நூல் விலை உயர்வுக்கு எதிராக ஜவுளித் தொழிலின் பல்வேறு தரப்பினரும் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இரண்டரை மாதங்களாக குரல் எழுப்பி வருவதுடன், ஆங்காங்கே போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.  கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோரும் தனித் தனியாக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி நூல் விலையைக் குறைக்க நடவ டிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள னர். தமிழக அரசு சார்பில் தலைமைச் செய லாளர் கடிதம் எழுதி இருக்கிறார். மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு ஜவுளி நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார். இவ்வளவு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியினர் வாயே திறக்கவில்லை. ஆனால் இப்போது அதைப் பற்றி வாய் திறந்திருக் கிறார்கள். உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரி வரும் 25ஆம் தேதி மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாகவும், முன்னதாக நூல் விலையை குறைக்க தமிழக அரசும் தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 21ம் தேதி  திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் பாஜக மாநில தலை வர் அண்ணாமலை பேட்டி அளித்திக் கிறார்.

பருத்தி நூல் விலை உயர்வுக்கு என்ன  காரணம் என்பதும், இதற்கு யார் நடவ டிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்பதும் தொழில் துறையினருக்கு நன் றாக தெரியும். ஒன்றிய பாரதிய ஜனதா அரசு தான் இதில் நடவடிக்கை எடுக்க முடியும். எடுக்கவும் வேண்டும். ஆனால் அண்மையில் நூல் விலை தொடர்பாக பதில் எழுதிய ஒன் றிய ஜவுளி மற்றும் தொழில், வர்த்தக அமைச் சர் பியூஸ் கோயல், நூல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கப் போவதில்லை என்பதை தெரி வித்து விட்டார். தொழில் துறையினரின் ஒன்றுபட்ட, வலிமையான போராட்டமே ஒன்றிய ஆட்சி யாளர்கள் இதில் தங்கள் கொள்கை நிலை பாட்டை மாற்றிக் கொண்டு விலைக் குறைப்புக்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க முடியும். அதனால்தான் இதுவரை போராட்டமே நடத்தாத திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் கூட ஜனவரி 17, 18 தேதிகளில் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தம் நடத்துவதாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர் கள் யாருடைய கவனத்தை ஈர்க்கப் போராடு கிறார்கள் தெரியுமா? ஒன்றிய அரசின் கவ னத்தை ஈர்க்கத்தான்! இது எதுவுமே தெரியாதது போலவும், வேறு யாருக்குமே இதைப் பற்றி தெரியா தது போலவும் அண்ணாமலை பேசுகிறார். மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மாம்! ஆனால் இதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி தெளி வாக அவர் எதுவும் சொல்லவில்லை. அவரது கட்சி ஆட்சி நடத்தும் ஒன்றிய அரசு நடவ டிக்கை எடுக்க நேர்மையாக முயற்சி செய்யா தது மட்டுமின்றி, இப்பிரச்சனையை அரசிய லாக திசை திருப்புவதற்கு மாநில அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப் போகி றார்களாம். யாரை ஏமாற்ற பாஜக இந்த கபட நாடகத்தை நடத்துகிறது?

நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை என்பது ஒன்றிய அரசின் அதிகாரத்தால் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. பருத்தி, நூல் ஏற்றுமதியை தடை விதிக்க வும், கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூலுக்கு விதிக்கப்படும் 11 சதவிகித இறக்குமதி வரியை நீக்கவும் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பருத்திக் கழ கத்தில் விவசாயிகளிடம் நியாயமான விலை யில் பருத்தியைக் கொள்முதல் செய்து, ஜவுளித் துறையினருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதையும் ஒன்றிய அரசுதான் செய்ய முடியும். ஆனால் இதில் ஒரு துரும்பைக் கூட அசைக்கத் தயாராக இல்லாத அரசு, கார்ப்பரேட் முதலாளிகள், பெரிய வர்த்தகர்களுக்கு ஆதரவாகவும், தான் மிகவும் நேசிக்கக்கூடிய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கை நிலை பாட்டுக்கு ஏற்பவும் நடந்து கொள்கிறது. இத னால் உள்நாட்டு தொழில் துறையினர் சீர ழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நூல் விலை மட்டுமின்றி, அனைத்து மூலப் பொருட்கள், உதிரி பாகங்கள் விலைவாசி யும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. 

இதனால் ஒட்டுமொத்த சிறு, குறு, நடுத் தர தொழில் துறையினரும் நிலை குலைந்து வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் பிரச்சனையை அரசியல் நோக்கத்தோடு திசை திருப்பி ஆதாயம் தேடலாம் என முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அது அவர்களின் ரத்தத்திலேயே ஊறியது. ஆனால் தொழில் துறையினர், தொழிலாளர்கள் இவர்களது கபடத்தனத்திற்கு ஏமாறக் கூடாது. மேலும் ஒன்றுபட்ட, வலிமையான போராட்ட நடவ டிக்கைகள் மூலம் ஒன்றிய அரசை நடவ டிக்கை எடுக்க நிர்பந்தம் செய்வதுடன், பாஜக மேற்கொள்ளும் கபடத்தனமான இரட்டை வேஷ நடவடிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும். அதன் மூலம்தான் இந்த தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் நியாய மான தீர்வை எட்ட முடியும் என்பதும் திண் ணம்.

-தூயவன்

;