what-they-told

img

திருப்பூர் நகரில் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

திருப்பூர், ஜன.27- அடர் வனப்பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற் குள் புகுந்து கடந்த நான்கு நாட்களாக தேடப்பட்டு வந்த  சிறுத்தை திருப்பூர் மாநகர எல்லையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அவிநாசி தாலுகா பாப்பாங்குளம் என்ற கிராமத்தில் கடந்த 24ஆம் தேதி விவசாயத் தொழிலாளர்கள் இருவர் தனியார் தோட்டத்தில் சோளத் தட்டு அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதன்மூலம் வனப்பகுதியில் இருந்து பாப்பாங் குளம் கிராமப்புறத்திற்கு சிறுத்தை வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தை யைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வேட் டைத் தடுப்பு காவலர் ஒருவர் சிறுத்தை தாக்குதலில் லேசான காயமடைந்தார். எனினும் அப்பகுதியில் இருந்து சிறுத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து சென்று கொண்டிருந்தது. வழிப்போக்கர் ஒருவர் நேரில் பார்த்த அடிப்படையில், இந்த சிறுத்தை கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்காக கடந்து புதுத்திருப்பூர் பகுதிக்கு வந்த தகவல் கிடைத் தது.

பொங்குபாளையம் பகுதியில் விவசாய நிலப்பரப்பில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சம் இருப்பதை வனத் துறையினர் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர். அங்கிருந்து சிறுத்தை திருப்பூர் மாநகர எல்லைப் பகுதியில் அவிநாசி சாலை அருகே அம்மாபாளையம் பகுதிக்குள் புகுந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.  மாநகராட்சி, பூண்டி எல்லைப் பகுதியில் தனியார் பின்ன லாடை நிறுவனத்தின் காவலாளி ஒருவரை இந்த சிறுத்தை  தாக்கியது. அதைத் தொடர்ந்து அங்கிருந்த முள்புதர் அருகே  ஒரு அறைக்குள் பதுங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர், தீயணைப்பு மீட்புத் துறையினர் துணை யுடன் வனத்துறையினர் இங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். உதவி வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி  செலுத்தினார்.

எனினும் முழுமையாக மயக்கம் அடையா மல் இருந்த நிலையில் இரண்டாவது மயக்க ஊசி செலுத் தப்பட்டது.  இதைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த சிறுத் தையை வனத்துறையினர் பிடித்து இரும்புக் கூண்டுக்குள் அடைத்து வாகனத்தில் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள அலுவலர் மற்றும் கோவை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராம சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பிடி பட்டிருப்பது ஆண் சிறுத்தை. இதன் வயது உள்ளிட்ட விப ரங்கள் ஆய்வுக்குப் பின் தெரியவரும். இந்த சிறுத்தையின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு, அடர் வனப் பகுதிக்குள் விடப்படும் என்று தெரிவித்தார்.

;