what-they-told

img

கோடை கால விடுமுறையை முன்னிட்டு உதகையில் கூடுதல் மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம், ஏப்.1 - கோடைகால விடுமுறையை முன்னிட்டு, மேட் டுப்பாளையம் - உதகை இடையே கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக தென் னக ரயில்வே அறிவித்துள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்  நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு  பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினசரி இயக் கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நிலையத் தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்ப டும் மலைரயில் பகல் 12 மணியளவில் உதகை சென் றடையும். பின்னர் மீண்டும் உதகையில் இருந்து  பகல் 2  மணியளவில் புறப்பட்டு மாலை  5.40   மணியளவில் மேட்டுப்பாளையம் வந்தடையும். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ள, இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி  மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள் நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது  வழக்கம். சுற்றுலா பயணிகளின் பெரும் வரவேற் பை பெற்றுள்ள,

இம்மலை ரயில் கோடை விடு முறை காலங்களில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி  வழியும். மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி  ஒருமுறை மட்டுமே மலை ரயில் இயக்கப்பட்டு வருவதால், கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும்  பலருக்கும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்று கிழ மைகளில் மலை ரயிலில் பயணிக்க டிக்கெட்  கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல் வார்கள். இதனை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடை கால சிறப்பு  மலை ரயில் கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே  துறையால் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாண் டும் வரும் கோடைகால விடுமுறைக்கு கூடுத லாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன் 25 ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் வரும்  சனிக் கிழமைகளில் மட்டும் காலை 9.10 மணிக்கு மேட்டுப் பாளையத்தில் இருந்து புறப்படும், இந்த கூடுதல்  சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகை  சென்றடையும். மீண்டும் அடுத்தநாள் ஞாயிற்று கிழமை காலை 11.25 மணிக்கு உதகையில் புறப்ப டும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பா ளையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி மேட்டுப்பாளையம்-உதகை -மேட்டுப்பாளையம் இடையே இந்த கோடை விடு முறை காலத்தில் மட்டும் பதினோரு முறை கூடுத லாக மலை ரயில் சேவை இருக்கும் என்பது குறிப்பி டத்தக்கது.