what-they-told

img

மாடல்களின் மரணத்திற்கு ஷைஜு காரணம் போதைப்பொருள் மாபியாக்களுடன் தொடர்பு

கொச்சி, டிச. 1- முன்னாள் மிஸ் கேரளா உட்பட 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்த வழக்கில் போ தைப்பொருள் மாபியாக்களு டன் தொடர்புடைய சைஜு தங்கச்சன், காரில் துரத்திச் சென்றதே காரணம் என்று கொச்சி நகர காவல் ஆணை யர் சி.எச்.நாகராஜு தெரி வித்தார். மூணாறு, பெங்களூரு, மாராரிகுளம், கோவா, கொச்சி ஆகிய இடங்களில் உள்ள இரவு விடுதிகளில் எம்.டி.எம்.ஏ., கஞ்சா ஆகிய கொடிய போதைப் பொருட்க ளை விநியோகம் செய்துள் ளார். சைஜுவின் நண்பர் கள் அவற்றை பயன்படுத் திய படங்கள் மற்றும் வீடி யோ காட்சிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொச்சி யில் இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்றவர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

மூணாறில் நடந்த பார்ட்டி குறித்து மேலும் விசாரிக்க வேண்டும். போர்ட் கொச்சி நம்பர் 18 ஹோட்டலில் இருந்து மாடல்கள் சென்ற காரை தீங்கிழைக்கும் நோக்கத்துடன் துரத்தி யுள்ளனர். மாடல்களுக்கு ஒரு அறை ஒதுக்கித் தருவதாக கூறி விருந்துக்கு ஏற்பாடு செய் யப்பட்டது. அதை ஏற்க மறுத்தவர்களை காரில் துரத்திச் சென்று, குண்ட னூரில் நிறுத்தி வாக்குறு தியை மீண்டும் கூறியும் அவர்கள் மறுத்துவிட்டனர். சைஜு வேகமாக வந்த தால் மாடலின் கார் பாலாரி வட்டத்தில் மரத்தில் மோதிய தாக காவல்துறையினர் தெரி வித்தனர்.

சைஜு மூலம் தகவல் அறிந்த ஓட்டல் உரி மையாளர் ராய் ஜே வைலட், சிசிடிவி காட்சிகள் பதிவாகாமல் இருக்க டிவி ஆரை அகற்றி ஏரியில் வீசி யுள்ளார். அதற்கு பதிலாக வெற்று ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. சைஜு விருந்தில் தொடர் ந்து பங்கேற்பவர் என்பதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது செல் போனில் இருந்து பல சிறுமிகளின் புகைப்படங்க ளும் கைப்பற்றப்பட்டன. முன்னணி கட்டுமான நிறு வனத்தின் புகாரின் பேரில் சைஜு மீது திருவனந்த புரத்தில் வழக்கு உள்ளது. அவர் போதைக்கு அடிமை. அவரது தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் வழக்கு தொடரப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார். சைஜூவை மேலும் 3 நாள் காவலில் வைக்க எர்ணா குளம் ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

;