what-they-told

img

ஆசிரியர் பணியிட மாறுதலில் புதிய விதிமுறை

மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு

சென்னை, அக்.13- ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க “தற்போது பணிபுரியும் பள்ளியில் 3 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்றியிருக்க வேண்டும்” என்ற விதியை தளர்த்தி மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு விலக்களித்து புதிய அரசாணை வெளியிட்டுள்ளதை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்றுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் நம்புராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் நடை பெற்றது. அந்த கலந்தாய்வுகளில் பங்கேற்பதற்கான விதிகளை வகுத்து ஜூன் மாதம் 20 ஆம் தேதியிட்ட அரசாணை (எண்.218)ஐ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

அந்த அரசாணையில். “தற்போது பணிபுரியும் பள்ளியில் மூன்றாண்டு கள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இந்த கலந்தாய்வுகளில் கலந்து கொள்ள முடியும்” என  புதிய விதி உருவாக்கப்பட்டிருந்தது. அந்த விதி, வசிப்பிடங்களிலிருந்து தொலை தூரங்களில், சொல்ல முடியாத துயரங்களோடு பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை கடுமையாக பாதித்தது. 

மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு இயன்ற வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்ற சட்ட விதியையும், வசிப்பிடித்திற்கு அருகாமையில் பணியமர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை தடுப்பதாக உள்ளதையும் சுட்டிக்காட்டி,  இந்த விதியிலிருந்து மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு விலக்களிக்கும் வகையில் உத்தரவிட நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சருக்கு சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் கோரிக்கை மனு அனுப்பியும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரி களை நேரில் சந்தித்தும் வலியுறுத்த ப்பட்டது. 

பாதிக்கப்பட்ட ஒரு சில மாற்றுத்தி றன் ஆசிரியர்கள், நீதிமன்றங்களு க்கு சென்று சாதகமான தீர்ப்புகளை யும் பெற்றனர். தற்போது இந்த விதியை தளர்த்தி, மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு விலக்களித்து பள்ளிக்கல்வித்துறை 4.10.2019 தேதியிட்டு, புதிய அரசாணை (எண்.393) வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.