what-they-told

img

ரூ.100 அபராதம்

சென்னை, ஏப்.16- சென்னை மாநகராட்சி பகுதியில் முகக்கவ சம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் செய்யப் படும் என வும், முகக்கவசம் அணியாமல் நடந்து வரும்  பாதசாரிகளிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்ப டும் எனவும் மாநகராட்சி ஆணையர் அறி வித்துள்ளார்.

இதுகுறித்து ஆணையர் பிரகாஷ் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்றை தடுக்க 1987 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தொற்று நோய்கள் சட்ட 2ஆவது பிரிவின்கீழ் பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் குற்றம் செய்த தாக கருதப்பட்டு, காவல்துறை மூலம் நடவடிக்கை  எடுக்கப்படுமெனவும், இந்த நடைமுறைகள் உட னடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.