சென்னை, ஏப்.8- ஐஆர்சிடிசி இயக்கும் 3 தனியார் ரயில்களுக்கான முன்பதிவை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. அகமதாபாத் - மும்பை தேஜஸ் விரைவு ரயில், டெல்லி - லக்னோ தேஜஸ் விரைவு ரயில், வாரணாசி - இந்தூர் மகாகாள் விரைவு ரயில் ஆகியவற்றை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது.
ஏற்கெனவே இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த 3 ரயில்களுக்கும் ஏப்ரல் 30 வரை முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்துக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி வழங்கப்படும் எனவு ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.