tamilnadu

img

முதலாளிகளை குளிர்விக்க மோடி அரசு தீவிரம்

புதுதில்லி:
1991-ஆம் ஆண்டு, புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் இந்தியஆட்சியாளர்கள் இறங்கினர்.இந்த 28 ஆண்டுகளில், வங்கி, காப்பீடு, தகவல் தொடர்பு துவங்கி பாதுகாப்புத்துறை வரை அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டன.எனினும் இந்திய ரயில்வே மட்டும், அதன் ஊழியர்களால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது.ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் மத்திய பாஜக அரசு, ரயில்வேயையும் தனியாருக்கு விட முடிவு செய்து, கடந்த20 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. ரயில்களை ஏலத்தில் எடுப்பதற்கு, தனியார் முதலாளிகள் 100 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுத்தது. 

இதற்கு கட்டாயமாக எதிர்ப்பு எழும்என்பதை முன்கூட்டிய உணர்ந்த மோடிஅரசு, “பயணிகள் கூட்டம் அதிகம் இல் லாத வழித்தடத்தில் ஒரு பயணிகள் ரயிலையும், ஒரு சுற்றுலா ரயிலையும் மட்டுமே தனியார் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது” என்றும், “இந்த ரயில்களை ஏலத்தில் எடுக்கும் தனியார்கள், அந்த ரயிலுக்கு தாங்கள்விரும்பும் பெயரை சூட்டிக் கொள்வார்களே தவிர, மற்றபடி ரயில் என்ஜின்மற்றும் பெட்டிகள் வாடகை அடிப்படையிலேயே தனியாருக்கு வழங்கப் படும். அந்த ரயில்வே பெட்டிகள் ஐ.ஆர்.சி.டி.சி. பொறுப்பிலேயே இருக்கும். டிக்கெட் விற்பனையும் ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே நடைபெறும்” என்றுரயில்வே ஊழியர்களை சமாதானப் படுத்த முயன்றது.

ஆனால், ஒரு ரயிலைக் கூட தனியார்மயமாக்க அனுமதிக்க மாட்டோம் என்றுதொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.எனினும், தொழிலாளர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மோடி அரசு, முதற்கட்டமாக தனியாருக்கு கொடுக்கவுள்ள 2 ரயில்களை தேர்வு செய்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தில்லி - லக்னோ பாதையில் ஓடும் தேஜாஸ் ரயில், தனியாருக்கு தரப்படுவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.தற்போது உத்திரப் பிரதேசத்தில் ஆனந்த் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தேஜாஸ் ரயிலுக்கு முறையாக முதலில் ஏலம் நடத்தப்படும்.திறந்த ஏலத்தில், தேஜாஸ் ரயிலை நல்ல
விலைக்கு ஏலம் எடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு, அதனை இயக்குவதற்கான உரிமை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.மற்றொரு ரயில் உறுதிப்படுத்தப் படவில்லை என்றாலும், அதுவும் இதேவழித்தடத்தில் ஓடும் ரயிலாக இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த ரயிலும் 500 கிலோமீட்டர் வழித்தடம் கொண்டதாகவே இருக்கும் என்பதை உறுதிப் படுத்தும் அவர்கள், இந்த இரண்டு ரயில்களில் ஒன்று, அடுத்த 100 நாட்களுக் குள் ஓடத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தில்லி - லக்னோ வழித்தடத்தில் தற்போது 53 ரயில்கள் ஓடுகின்றன. அந்த53 ரயில்களில் சுவர்ண சதாப்தி ரயில், வெறும் 6 மணி 30 நிமிட நேரத்தில் பயணதூரத்தை கடந்துவிடக் கூடியது. இந்தரயில்கூட தனியார் சோதனை ஓட்டத்துக்கு கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இந்திய ரயில்வே துறையானது, உலகின் 4-ஆவது பெரிய ரயில்வே ஆகும்.13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்பணிபுரிந்து வருகின்றனர். இந்திய ரயில்வே-க்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது.இந்த 2 லட்சம் கோடி ரூபாயை பெருமுதலாளிகளுக்கு சூறைவிடும் வகையிலேயே ரயில்வே தனியார்மயத்தை மோடி அரசு துவக்கி வைத்துள்ளது.