what-they-told

img

கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

நிலத்தில்  அழுகும்  காய்கனி-பழங்கள் கண்ணீர்  சிந்தும்  விவசாயிகள்

கொரோனா பீதி, ஊரடங்கு உத்தரவு, வீட்டை விட்டு வெளியே  வர முடியாது நிலை, வியாபாரி கள் கொள்முதல் செய்ய தவிர்ப்பு, வாகன வாடகை இரு  மடங்கு அதிகரிப்பு என பல்வேறு  காரணங்களால் நிலத்தில் பயிரிட்ட காய்-கனி பழங்களை அறுவடை செய்ய முடியாமல்  விவசாயிகள் தவித்து வரு கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த காட்டுக்கரணை கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டிருந்தனர். கடந்த பிரவரி மாதம் முதலே அறு வடைக்கு தயாரான தர்பூசணி பழங்கள் டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என்று நம்பி இரவு பகலாக தண்ணீர் பாய்ச்சி வந்த விவசாயிக ளின் தலையில் கொரோனா பீதியும், ஊரடங்கு உத்தரவும் பேரிடியாக இறங்கி உள்ளது.

ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செல்வழித்து தர்பூசனியை பயி ரிட்டு பார்த்த விவசாயிகள், பலனை அனுபவிக்க இயலா மல் கடும் அதிச்சியில் தவித்து  வருகின்றனர்.  இங்கிருந்து சென்னை மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம், தெலுங் கானா, கேரளாவிற்கும் பழங்கள் கொண்டு செல்லப்படும். ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் சரக்கு லாரிகள் வருவதில்லை.

மறுபுறம், பழத்தை தொட்டுப்  பார்த்து வாங்குவதால் அதில்  கொரோனா கிருமி ஓட்டிக்கொள் ளும் என்று வியாபாரிகள் வாங்கிச் செல்ல வராததால் 100 டன்களுக்கு மேல்பட்ட தர்பூசணி பழங்கள் கொடியிலேயே பழுத்து அழுகி வருவதால் விவ சாயிகள் வேதனை தெரிவித்த னர். இதேபோல் தண்டளம்,  பெரும்பாக்கம், வெள்ளப்புத் தூர், செய்யூர், மதுராந்தகம், ஆகிய ஊர்களில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி பழங்  களையும் வாங்கிச் செல்ல வியா பாரிகள் முன் வராததால் விவ சாயிகள் பரிதவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.  இந்த நிலை இங்கு  மட்டுமல்ல. விழுப்புரம் உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்கிறது.

திருச்சி, சத்தியமங்கலம், கன்னியாகுமரி போன்ற பகுதி களில் வாழைத்தார் களை வெட்டிச்செல்ல வியாபரிகள் வராததால் மரத்திலேயே பழம்  பழுத்து அழுகுவதால், விவசாயி களுக்கு பெரும் நஷ்டம் ஏற்  பட்டுள்ளது. வாகன கட்ட ணத்தை காரணம் காட்டி வியா பாரிகள் வாழைத்தார்களை வெட்டுவதை தவிர்த்து வருவ தாக கூறப்படுகிறது. அதே போல கரூரில் வெள்ள ரிக்காய்களை ஏற்றிச் செல்ல கூடு தல் கட்டணம் கேட்டதால் அவை  அனைத்தும் குப்பையில் கொட்டப்பட்டது.

காய்கறி மற்றும் பழங்களை ஏற்றிவரும் வாகனங்க ளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்  கப்பட்டுள்ள நிலையில், வியா பாரிகள் எதற்காக செல்வ தில்லை. மேலும் சுங்க கட்ட ணத்தில் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் வாகன உரிமையா ளர்கள் கூடுதல் கட்டணம் வசூ லிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித் துள்ள லாரி உரிமையாளர்கள், வழக்கமான நாட்களில் சென் னைக்கு பாரம் ஏற்றி வரும் லாரி கள் இங்கிருந்து செல்லும் போது  வேறு ஏதாவது பாரம் ஏற்றிக் கொண்டு செல்வதால் வாடகை குறைவாக கேட்கப்பட்டதாகவும், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் திரும்பி செல்லும் லாரிக்கு எந்த பாரமும் கிடைக் காது என்பதால் இரு வழி கட்ட ணம் வசூலிக்கப்படு வதாகவும் தெரிவித்தனர்.

வாடகை ஒரு பிரச்சினை இல்லை என்றாலும்,  காய்கறி பழங்கள் அழுகும் பொருட்கள் என்பதால் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கு வதை, வியாபரிகள் வழக்கமாக செய்து வருவதாகவும், தற்போது  பதற்றத்தில் இருக்கும் மக்களி டம் செயற்கையாக விலையேற் றத்தை உருவாக்கி இருப்பதாக வும் குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன. அதே நேரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் நிலங்களி லேயே வீணாவதை தடுத்து விவ சாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்து மக்களிடம் நியாயமான விலக்கு கொண்டு சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவ சாயிகள் விருப்பமாகும்.