சென்னை, டிச. 17- வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர், 11 ஆவணங்களில் ஏதா வதொன்றைகாட்டி உள்ளாட்சித் தேர்த லில் வாக்களிக்கலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, 100 நாள் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப் பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணம், வாக்கா ளர் புகைப்படச் சீட்டு உள்ளிட்ட வற்றில் ஏதேனும் ஒன்றை காண் பித்து வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்டப்பூர்வ ஆணையையும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ளது.