what-they-told

img

ஜன.15 முதல் ஒரே ரேசன்கார்டு திட்டம் அமல்

புதுதில்லி, டிச.28-  நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு திட்டத்தை முதல் கட்டமாக 12 மாநிலங்க ளில் ஜனவரி 15 ஆம் தேதி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இந்த திட்டத்தை  2013 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு பாது காப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழு வதும் எந்த மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஏற்பாடு களை மத்திய நுகர்வோர் நலத்துறை மற்றும் உணவு பொது விநியோக திட்ட துறைகள் இணைந்து செய்து வருகின்றன. முதல் கட்டமாக இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, அரி யானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியபிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் அமல் படுத்தப்படுகிறது.