சென்னை,ஜன.11- பொங்கல் பரிசு தொகுப்பைப் பொது மக்கள் நெரிசல் இன்றி வாங்கி செல்வதாக வும் ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 11) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவ தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வசதியாக அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டை களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. 2 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு ஜன.9ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் வாங்கி செல்ல வசதி யாக தெருவாரியாக பிரிக்கப்பட்டு விநியோ கிக்கப்படுகிறது. தினமும் 300 குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் தொகுப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. இதுவரை 1.30 கோடி அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடை ஊழியர் எவ்வித சிரமமுமின்றி வழங்கி வருகிறார்கள். தெருவாரியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுவதால் கூட்டம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரி வித்தனர். இன்னும் 50 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டியிருக்கும். பெரும்பாலானவர்கள் பெற்று விட்டதால் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் குறைந்து விட்டது.
சனிக்கிழமை தொடர்ந்து வழங்கப்படுவதால் பெரும்பாலான கார்டுகளுக்கு கிடைத்துவிடும் என்றும் ஞாயிற்றுக்கிழமையும் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது. வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் ஞாயிறன்று வீட்டில் இருப்பதால் அவர்களும் பெற்றுக் கொள்ள லாம் என்றும் அவர்கள் கூறினர். இந்த 4 நாட்களிலும் வாங்காதவர்கள், வெளியூர் சென்றவர்களுக்குத் திங்கட்கிழமை வழங்கப்படும். அதனால் அரிசி அட்டை உள்ள அனைவருக்கும் 13ஆம் தேதிக்குள் முற்றிலும் வழங்கப்பட்டுவிடும் என்றார் ஒரு அதிகாரி.