what-they-told

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

புதுதில்லி, ஜூலை 15- பிஎஸ்என்எல் அனைத்து யூனியன்கள் மற்றும் சங்கங்களின் கன்வீனர் பி.அபிமன்யு மற்றும் தலைவர் சந்தேஷ்வர் சிங்  ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி யாற்றும் அனைத்து ஊழியர்களும் சங்க வித்தியாசமின்றி வியாழக் கிழமை அன்று மதிய உணவு இடை வேளையின்போது அனைத்து யூனி யன்கள் மற்றும் சங்கங்கள் பதாகை யின் கீழ் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங் கள் மேற்கொள்வார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவாது இருப்பதற்காக தனி நபர் இடைவெளியை உறுதிப் படுத்திக்கொண்டு நடைபெறும். மேலும் ஊழியர்கள் வியாழன் முழுவதும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலை பார்ப்பார்கள்.  

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 79 ஆயிரம் பேர் சுய ஓய்வுத் திட்டத்தின் கீழ்  பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் பும், பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்கப்பட வில்லை.  பிஎஸ்என்எல் நிறுவனம் மிக வும் மோசமான நிலையில் இருந்துவரு கிறது. இதனைச் சரிசெய்திட 4-ஜி சேவையை அளித்திட அரசாங்கம் ஏதே னும் காரணங்களைக் கூறி மறுத்து வரு கிறது. ஆனால் அதே சமயத்தில் தனி யார் நிறுவனங்களுக்கு அவ்வாறு எவ்வி தக் கட்டுப்பாடுகளையும் அது விதிக்க வில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஆரோக்கியமான முறையில் செயல்பட அனுமதிக்க வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். ஜூலை 16 அன்று ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வார்கள். மதிய உணவு இடை வேளையின்போது கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வார்கள். ஜூலை 13 இலிருந்து 31 ஆம் தேதி வரையிலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இப்பிரச்சனையில் தலையிட வலியுறுத்தி மனுக்கள் அனுப்பப்படும்.ஆகஸ்ட் 5 அன்று கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி, டிவிட்டர் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.  

(ந.நி.)