கடந்த சில மாதங்களாக பீகார் மாநிலத்தை டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. பாட்னா மற்றும் பாகல் பூரில் டெங்கு பாதிப்பு நிலவரம் மிகமோசமான அள வில் அதிகரித்து வருகிறது. பாகல்பூரில் 300 பேருக்கும், பாட்னாவில் 298 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரி வித்துள்ள நிலையில், பீகார் மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 675 ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பைக் கருத்தில் கொண்டு பீகாரின் 38 மாவட்டங் களுக்கும் மாநில சுகா தாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாநில அரசின் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் சிறப்பு படுக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைநகர் மண்டலமான பாட்னா மாவட்ட நிர்வாகம் கால் சென்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. டெங்கு நோயாளி களுக்கு ஹெல்ப்லைன் எண்களை வழங்கி, மக்கள் ரத்த தானம் செய்யுமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பீகார் மட்டுமல்ல உத்தரப்பிரதேசம் மாநி லத்திலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.