சென்னை, மார்ச் 31- சுற்றுலா பயணம் தொடர்பான டிடிஎப் எனப்படும் கண்காட்சி சென்னை யில் வியாழனன்று (மார்ச் 31) தொடங்கி யது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இதனை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். பெருந்தொற்றால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடந்த இரணடு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப் பட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதால் பொதுமக்களிடம் சுற்றுலா குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த இந்த கண்காட்சி பயன்படும். இந்த கண்காட்சியில் தமிழ்நாடு. கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த மாநிலங்களில் உள்ள சுற்று லாத் தலங்கள் குறித்து பொதுமக்களும் சுற்றுலா அமைப்பாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத் தலங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தனியார் சுற்றுலா பயண நிறுவனங்களும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்துப்பேசிய அமைச்சர் மதிவேந் தன், தமிழகத்தில் சுற்றுலாத் தலங்க ளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நீர் விளையாட்டு போன்ற சுற்றுலாத் திட்டங்களை அதிகளவில் ஏற்படுத்துவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். கொடைக்கானல், ஒகேனக்கல் ஆகிய சுற்றுலாத் தலங்களில் புதிய வசதிகள் செய்து தரப்படும் என்றும் கூறினார். சுற்றுலாத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு அரசு சுற்றலா மற்றும் வளர்ச்சிக்கழக இயக்கு நர் சந்திப் நந்தூரி, இந்திய சுற்றுலா சென்னையின் மண்டல இயக்குநர் முகமது ஃபாரூக் உள்பட பலர் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை 3 நாட்கள் நடைபெற வுள்ளது.