வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஒடிசா கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடலில் அலைகள் உயரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, குறிப்பிட்ட கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலில் உள்ளோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.