புது டில்லி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாகக் கனமழை பெய்யக் கூடும் என்று ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் "மஞ்சள் எச்சரிக்கை" விடுத்துள்ளது .
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இந்த புயலானது , அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசாவில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த காற்றழுத்த தாழ்வு , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறி , வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் தீவிரமடையும் என்றும் , மேலும் இது செப்டம்பர் 26ஆம் தேதி மாலை கலிங்கத்துப்பட்டணத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .
எனவே , இவ்விரு மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் "மஞ்சள் எச்சரிக்கை" விடுத்துள்ளது .