weather

img

ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

 சென்னை : ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ராணிப்பேட்டை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் , நீலகிரி , கோவை , தேனி,  ஈரோடு , நாமக்கல் , சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.