weather

img

அடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...  

சென்னை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. தென் மாவட்டங்களை காட்டிலும் வடமாவட்டங்களில் அனல்காற்றுடன் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவஸ்தையை சந்தித்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்றைய நிலவரப்படி திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். திருப்பத்தூர், வேலூர், திருச்சி மாவட்டங்களிலும் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதால் இந்த பகுதியிலும் பரவலாக அனல்காற்று வீசும். குறிப்பாக 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் 5 வரை வெப்பநிலை உயரக்கூடும். வடகடலோர மாவட்டங்களை பொறுத்தவரை 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. வெயில் தொடர்ந்து கொளுத்துவதால் பகல் 12 முதல் மாலை 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்" என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

ஆறுதல் விஷயமாக வளிமண்டல சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதுதெற்கில் இருந்து தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிபிடத்தக்கது.