சென்னை,மார்ச்.30- 7 மாவட்டங்களில் ஏப்ரல் 2,3இல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல்
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. இதனால் மக்கள் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் ஏப்.2ஆம் தேதியும், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஏப்.ஆ3ம் தேதியும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.