tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110இன் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி,

  • தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படுகிறது.
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
  • அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கான கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
  • ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.
  • ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்படுகிறது.

மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வுதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.