court

img

முருகேசன் - கண்ணகி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி!

புதுதில்லி,ஏப்.28- முருகேசன் - கண்ணகி ஆணவப்படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கடந்த 2003ஆம் ஆண்டில் கடலூர் விருத்தாசலம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கண்ணகி-முருகேசன் ஆகிய இருவரும் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு 13 பேரும் குற்றவாளிகள் என கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் இந்த வழக்கில் முதலில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் கண்ணகியின் அண்ணனுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. பிறகு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 13 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு குற்றவாளிகள் 13 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.