தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி 01-01-2025 முதல் அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.