கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த வாரம் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஜூலை 15,16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 7 முதல் 11 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 2 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.