ஆப்பிள் சாதனங்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் ஐபோன், ஐபாட், ஆப்பிள் டிவி உள்பட அனைத்து ஆப்பிள் சாதனங்களும் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பான Cert-In எச்சரிக்கை விடுத்துள்ளது.
iPhones: iOS 18.6-க்கு முந்தைய பதிப்புகள், iPads: iPadOS 17.7.9/18.6-க்கு முந்தையவை, Macs: macOS Sequoia 15.6, Sonoma 14.7.7, Ventura 13.7.7-க்கு முந்தையவை, Apple Watch: watchOS 11.6-க்கு முந்தையவை, Apple TV, Vision Pro: tvOS/visionOS 18.6/2.6-க்கு கீழ் இருக்கும் சாதனங்கள் தான் அதிகளவில் பதிக்கப்பட வாய்ப்புதாக cert in தெரிவித்துள்ளது
மேலும் இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்டுகளை உடனே புதுப்பிக்க வேண்டுமென பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.