technology

img

Google Search-இல் ஆங்கிலம் கற்போருக்கு புதிய அம்சம் அறிமுகம்!

கூகுள், ஆங்கிலம் கற்போருக்கு உதவும் வகையில் Google Search-இல் புதிய ‘personalized feedback’ அம்சம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

கூகுள் நிறுவனம் ஆங்கிலம் கற்போருக்கு உதவ ஆங்கிலம் கற்கும் பயனர்களுக்கு, 3-5 நிமிட பயிற்சியின் அடிப்படையிலும் மற்றும் கற்றலை உறுதிப்படுத்த தினசரி நினைவூட்டல்களை வழங்குகிறது.

ஆங்கில கற்றல் செயல்முறையை மேம்படுத்த, பயிற்சியின் போது பயனர்கள் ஒரு வாக்கியம் அல்லது வார்த்தைக்கு  மொழிபெயர்ப்பு அல்லது  பொருளைப் பெற உதவும்.

புதிய ஆங்கிலக் கற்றல் அம்சங்களுக்காக கூகுள் மொழிப்பெயர்ப்பு குழுவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Deep Aligner என்ற ஆழமான கற்றல் மாதிரியால் இயக்கப்படுகிறது.

ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கலாச்சார இணைப்புகள், உலகளாவிய பயணம் மற்றும் தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல வாய்ப்புகளை வழங்குகிறது.

கூகுளின் அம்சமானது, மொழித் திறனைடைவதில் கற்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பது, மேலும் பயனுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் மொழி கற்றல் அனுபவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு தனிநபரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறும், இலக்கணம் அல்லது உச்சரிப்புத் தவறுகளைச் சரிசெய்வதற்கும் மற்றும் ஒரு செய்தியின் பொருளை இந்த அம்சம் அளிக்கிறது.

இந்த அம்சம் சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் பல மொழிகள் மற்றும் நாடுகளுக்கு இந்த அம்சம்  செயல்பாட்டை விரிவுபடுத்தும் என கூகுள் தெரிவித்துள்ளது.