X அறிமுகப்படுத்தியிருக்கும் Community Notes எனும் அம்சத்தின் மூலம் போலி தகவல்கள் பகிரப்படுவது தவிர்க்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Community Notes எனும் அம்சத்தில் குறிப்பிடப்பட்ட(notes) புகைப்படம்/வீடியோ பதிவிடுகையில், அது தொடர்புடைய வேறு பதிவுகளில் அதே புகைப்படம்/வீடியோ இடம்பெற்றிருந்தால் ஏற்கனவே பதிவிட்டிருப்பதாய் காண்பிக்கும்.
வீடியோவை பற்றிய குறிப்புகளைச் சேர்க்கையில், “இந்த பதிவில் உள்ள வீடியோவைப் பற்றி, இந்த வீடியோ பதிவு உட்பட எல்லா பதிவுகளிலும் இது தோன்ற வேண்டும்” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கக் கேட்கும்.
Community Notes-ஆல் ஒரு பதிவு எங்கு எவ்வளவு முறை பகிரப்பட்டாலும் பயனர்களுக்குப் பல தகவல்கள் கிடைக்கும் என கருதப்படுவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள fact checking feature அம்சம், போலியான அல்லது தவறாக வழிநடத்தும் புகைப்படங்கள், வீடியோ மற்றும் குறிப்புகளை flagging fake-ஐ செய்ய சில பயனர்களுக்கு வழிவகுக்கிறது.