tamilnadu

img

காலமானார்

வேலூர், மே 22-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக் குழு உறுப்பினர் குப்பு அவர்களின் தாயார் ருக்குமணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.காசிநாதன், பி.காத்தவராயன், எஸ்.ஏகலைவன், கே.சாமிநாதன், தாலுகா செயலாளர்கள் வி.நாகேந்திரன், கே ஜெ.சீனிவாசன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.நரசிம்மன், துரைராஜ், குணசேகரன் மற்றும் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் பணி புரியும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டத் தலைவர் அருளின் இளைய மகள் ரேவதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொறியாளர் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் கே.அருட்செல்வன், பொருளாளர் ஜெ.ஏங்கல்ஸ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் வேலூர் மண்டலச் செயலாளர் எம்.கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி திட்ட கிளைச் செயலாளர் ஏ.கருணாநிதி, தருமபுரி திட்டக் கிளைச் செயலாளர் பி.ஜீவா, தலைவர் லெனின், திருப்பத்தூர் திட்டக் கிளைச் செயலாளர் எஸ்.சிவசீலன், பொருளாளர் எஸ்.ஜோதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. காத்தவராயன், பி. சக்திவேல்,தாலுகா செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.