போதை மாத்திரை விற்பனை: 13 பேர் கைது
போதை மாத்திரை விற்பனை: 13 பேர் கைது சேலம், பிப்.22- கிச்சிபாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை யில் ஈடுபட்டிருந்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதை கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாங்கிப் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. மேலும், இதுதொடர் பாக அண்மையில் மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தனர். இதனைத்தொடர்ந்து, மாநகரக் காவல் ஆணையர் பிர வீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில், துணை காவல் ஆணை யர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இந்நிலையில், சேலம், கிச்சிப்பாளையம் கஸ்தூரி பாய் தெரு, குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் தனிப்படையினர் வியாழனன்று இரவு சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் போதை ஊசி, மாத்திரைகளை விற்பனை செய்த சுதர்சன் (25), தினேஷ்குமார் (24), கிஷோர் (22), சரவணன் (51), பிரகதீஸ்வரன் (50), அக்பர் (56) உள்பட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 800 போதை மாத்திரைகள், 50 சிரிஞ்சி கள், இரண்டு இருசக்கர வாகனங்கள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஊசிகளையும் பறிமுதல் செய்த னர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சேலம், பிப்.22- சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்கா லிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலில் சிவப்பு விளக்கை மீறுவது, அதிக சுமை ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும், கைப்பேசியில் பேசிக்கொண்டு வாக னம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமம் 3 மாத ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் மட்டும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரி ழப்பை ஏற்படுத்திய 37 ஓட்டுநர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கோவை, பிப்.22- தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பி னர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வாடிக்கையாளர்களின் வங்கி கட்ட ணங்களை குறைக்க வேண்டும். தற்கா லிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கி செயல்பாடு களில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. கிராஜூவிட்டி ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். வங்கி, ஊழியர், அதிகாரிகள் வங்கி இயக்குனர் பதவி நிரப்பப்பட வேண்டும், பழைய ஓய்வூ தியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர், அதிகாரிகள் கூட்டமைப்பி னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதன்ஒருபகுதியாக வங்கி ஊழியர் கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பாக வெள்ளியன்று கோவை மாவட்டம், யூனியன் வங்கி, நூறடி ரோடு கிளை, முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாஷா (AIBEA) தலைமை வகித்தார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலா ளர் சையது இப்ராஹிம், ஆத்ரேயா (AIBOC), செந்தில் குமார் (NCBE) சசி தரன் (AIBOA), மகேஸ்வரன் (BEFI), தியாகராஜன் (INBOC) ஆகியோர் உரை யாற்றினர். இதில் ஊழியர்கள், அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய தொடக்க கல்வி அலுவலர் கைது
உதகை, பிப்.22- அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரி யரிடம் ரூ. 2 லட்சம் பணம் வாங்கிய மாவட்ட தொடக்க கல்வி அலுவ லரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் (40). இவர் 2018 ஆம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்திரம் செய்ய மறுப்பு தெரிவித் தது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு காலம் பணியாற் றியதற்கான நிலுவைத் தொகை ரூ.20 முதல் ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதைத்தொ டர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய் தார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவ தற்கான உத்தரவை வழங்க வலியு றுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார். இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்டுள்ளார். பின்னர் ரூ.2 லட்சம் பணம் தருவது என முடிவெடுத் துள்ளனர். ஆனால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை உதகை பிங்கர்போஸ்ட் பாலிடெக் னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுத் தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முக வடிவு, உதவி ஆய்வாளர்கள் சாதன பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமை யிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் அவரை கைது செய்தனர்.
படுகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நாமக்கல், பிப்.22- படுகை அணையிலிருந்து ராஜவாய்க்காலுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் சனியன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்கால் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீர் பொய் யேரி, கொமாரபாளையம், மோகனூர் கிளை வாய்க்கால் கள் மூலம் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் 15 நாட்களுக்கு கால்வாய் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு இந்த வாய்க்கால்களில் 22 நாட்களுக்கு பராமரிப்புப் பணி கள் நடைபெறவுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜவாய்க்கால் வழி யாக திறக்கப்படும் தண்ணீர் சனியன்று முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவி தொகைத் தேர்வில் 182 பேர் பங்கேற்கவில்லை
திருப்பூர், பிப். 22- தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை திட்டத் தேர்விற்கு விண்ணபித்திருந்த 182 பேர் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பள்ளிகளில் இடைநிற்றலை தடுப்பதற்காகவும், வருவா யில் பின் தங்கிய அளவில் உள்ள மாணவர்களும் பயன்பெ றும் வகையில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புத வித் தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 7ஆம் வகுப்பில் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடத்தப் படும் இந்த தேர்வில், தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் களுக்கு திறன் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னி ரெண்டாம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ஒன்றிய அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒன்றிய கல்வி அமைச்ச கத்தால் நடத்தப்படும் இந்த தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் சனி யன்று 24 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுது வதற்காக 7047 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 6865 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 182 பேர் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள் ளது.
குளத்தில் வெட்டி வீசிபட்ட சடலம்: போலீசார் விசாரணை
அவிநாசி, பிப்.22- அவிநாசி அருகே கருவலூரைச் சேர்ந்த நபரை குளத்தில் மூட்டையைக் கட்டி வெட்டி வீசப்பட்ட சடலத்தை கைப் பற்றி போலீசார் சனியன்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூர் காளிபா ளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (54). பனியன் நிறுவனத்தின் மேலாளர். புதன்கிழமை முதல் கோவிந்த சாமியைக் காணவில்லை என்று குடும்பத்தினர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவிநாசி போலீஸார், பல்வேறு இடங்களில் கோவிந்தசாமியைத் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலை யில் பெருமாநல்லூர் அருகே தொரவலூர் குளத்தில் வெள்ளிக்கிழமை காலை வெள்ளை சாக்கில் கட்டியபடி அட் டைப்பெட்டி மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் வெள்ளை சாக்கை மீட்டு பார்த்ததில், அதில் காணாமல் போன கோவிந்தசாமி உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அட் டைப்பெட்டியில் வைத்து குளத்தில் தூக்கி வீசியிருப்பது தெரி யவந்தது. மேலும் அவரது உடலில் மற்ற பாகங்களை போலீ ஸார் தேடி வருகின்றனர்.
மின் இணைப்பு இல்லாத ஏழை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
உடுமலை, பிப்.22- விவசாய பயன்பாட்டிற்கு மின் இணைப்பு வழங்கும்போது, இதுவரை மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு மின்வாரியம் முன்னுரிமை தர வேண்டும் என விவசா யிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கோரி மனு தாக்கல் செய்து வரும் நிலையில், மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளின் நிலையை அறியாமல் அனைத்து தரப்பு விவசாயிகளிடம் இருந் தும் மனு பெற்று மின் இணைப்பு வழங்கி வரு கிறார்கள். இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கை யில், மின் வாரியத்தின் சார்பில் ஒரு குறிப் பிட்ட நில அளவின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத னால் பணம் உள்ள விவசாயிகளுக்கு ஒன்றுக் கும் மேற்பட்ட மின் இணைப்புகள் கிடைக்கி றது. மேலும் தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியும் மின் இணைப்பு பெறுகிறார்கள். ஆனால் இதுவரை இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித்துள்ள ஏழை விவ சாயிகளுக்கு மின் வாரியம் மின் இணைப்பு தராமல் உள்ளனர். எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு சுய நிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்கள்.
பத்திரப்பதிவு செய்ய முடியாமல் ஒதுக்கப்பட்ட கிராமங்கள்
உடுமலை, பிப்.22- உடுமலை வருவாய் துறையின் தவறான பதிவால், பல கிராமத்தின் வீடுகள் மற்றும் வீட்டுமனை நிலங்கள் விற்பனை மற்றும் வங்கி கடன் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுக ளுக்கு மேலாக மக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர். உடுமலை தாலுகா குடிமங்கலம் மற்றும் உடுமலை ஒன்றிய மேற்கு பகுதியில் உள்ள பல கிராம மக்கள் பத்திரப்பதிவு செய்ய பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் பகுதி யில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி மற்றும் பண்ணைகிணறு உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடு மற்றும் வீட்டுமனை நிலங்களை பத்திரபதிவு செய்ய முடியாது என்று பத்திரப் பதிவு அலுவலகத்தில் கூறுவதாகவும், இத னால் கடும் பாதிப்பை சந்திப்பதாகக் மக்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை என பல முறை அதிகாரி களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக தமி ழக அரசு உடுமலை வருவாய் துறையின் தவ றான பதிவை நீக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பிப்.25ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
உடுமலை, பிப்.22- உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வரும் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயி கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. வரு வாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும், இந்த கூட்டத்தில் உடுமலை மற் றும் மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் மாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
நிலம் அளவீடு பணிகளில் வருவாய்துறையினர் மெத்தனம்
நாமக்கல், பிப்.22- விளை நிலம் அளவீடு செய்யும் பணிகளில் வருவாய் துறையினர் மெத்தனமாக செயல்படுவதால், திருச்செங் கோட்டில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றிய அலுவ லகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று, கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், நிலம் அளவீடு பணிகளில் வருவாய்துறையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர். இத்தகைய போக்கை கைவிட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செளதாபுரத்தில் ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் விளை நிலத்தின் வழியாக செல்வதால் பயிர்கள் பாதிக்கப் படுகிறது. இதை சரிசெய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். நிலப் பிரச்சனை தொடர்பாக புகாா் தெரிவித்தால். போலீ சார் தங்கள் மீதே பொய் வழக்குகளைப் போட்டு அலைக்கழிக் கின்றனர். விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதி லளித்து கோட்டாட்சியர் பேசுகையில், சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க இடம் ஆய்வு செய்யப்படும் போது அந்த வரை பட சாலை வழியாக கழிவுநீர் கொண்டு செல்லத்தான் ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரி விக்கின்றனர். இதனால் விவசாய நிலத்தில் கழிவுநீா் செல்லும் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். பயிர்களில் வெள்ளைப் பூச் சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் குடிநீர் இணைப்பை அடைத் தால், அவர்கள் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.